1450 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நபிகள்நாயகம் (ஸல் ) அவர்களுடைய ஆட்சியாளத்தில் மிகப்பெரிய அரபு சாம்ராஜ்யத்தை ஆண்டுவந்த மிகப்பெரிய பெரும்மன்னர் நபி அவர்கள் மிகப்பெரிய ஆட்சியாளராக அன்றைய அரபுலகில் ஆட்சி செய்து வந்தவர். அரசு கஜானாவில் குவிக்கப்பட்டு இருந்த செல்வங்களில் ஒரு பேரித்தம் பழம் துண்டை தன்னுடைய பேரக்குழந்தை எடுத்து வாயில் வைத்ததற்காக அதை தடுத்து கண்டித்தவர் இது மக்களுக்கானது எனது குடும்பத்தார் யாரும் இதை அனுபவிக்க கூடாது என்று உத்தரவிட்டவர் நபிகள் நாயகம் அவர்கள்.
மிகப்பெரிய பேரரசர் அவருடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்ற ஒரு சிறிய குறிப்பை இங்கே வரலாற்று நூல்கள் மூலம் பார்க்க முடிகிறது👇
ஒரு தடவை நபியவர்களின் வீட்டிற்கு நபியவர்களைச் சந்திப்பதற்காகச் சென்ற உமர்(ரலி) அவ்வீட்டின் வறுமை நிலையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
அரபு நூல் புகாரி 4913- حَدَّثَنَاعَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ ، عَنْ يَحْيَى ، عَنْاللهِ
அப்போது நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயில் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கும் இடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழ் ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்று இருந்தது. அவர்களின் கால்களுக்கு அருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம் பாயின் சுவடுகள் பதிந்திருப்பதைக் கண்டு அழுது விட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ”ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ”அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் போன்ற மன்னர்களெல்லாம் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”அவர்களுக்கு இம்மையும், நமக்கு மறுமையும் இருப்பதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். நூல்: புகாரி 4913
இவ்வாறு வறுமையை இறைத்தூதர் அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு ஆட்சி செய்தார்.
அவருக்குப் பின்பு உமர் உள்ளிட்ட பல்வேறு நபி தோழர்கள் மிக நேர்மையான ஆட்சியை உலக மக்களுக்கு முன் உதாரணமாக தந்திருக்கிறார்கள்.
@thondinews faiz
