பேரூராட்சி மன்ற தலைவரின் செயல்பாடு பூஜ்ஜியமாக உள்ளது. தலைவரின் பதவியை அவரது மகன் பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு வார்டு உறுப்பினர்களால் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. இது பற்றி கூறுகையில் பொது நிதி தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வார்டு உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளின் குறைகளை சரி செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இதனால் வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் உறுப்பினர்கள் திணறுகிறார்கள்.
இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 30 பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜகான் பானு அவர்கள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர்களின் பல்வேறு குறைகளை விவாதிக்கும் பொழுது அதற்கான பதில் ஏதுமில்லை மேலும் மன்ற கூட்டத்தில் மாதாந்திர செலவுகணக்கு சீட்டை காட்டப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும். தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
பேரூராட்சிகளுக்கான அனைத்து கொள்முதல் பொருள்களும் தன்னுடைய பேரூராட்சி மன்ற தலைவரின் மகனின் கடையிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் மன்ற உறுப்பினர்களால் வைக்கப்படுகிறது மேலும் இதன் மூலம் மிகப்பெரிய ஆதாயத்தை பேரூராட்சி மன்ற தலைவரின் மகன் பெற்று வருகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நிலவுகிறது.
இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இதையெல்லாம் விவாதிக்க தயார் இல்லை.
இந்நிலையில் அழிந்துவருகிறது மன்ற தலைவர் மேலும் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நீர் நிலைகளில் முற்றிலும் தாமரைகள் நிறைந்து நீர்நிலைகளை அழிந்து வருகிறது மேலும் தூர்வாரப்படாத நிலையில் ஆறு மாத காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில் நீர் நிலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என்றும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து 15,வது வார்டு உறுப்பினர் பெரியசாமி கூறுகையில்
வரும் பருவமழைக்கு முன் நீர்நிலைகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் மணிமுத்தாறு கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் வரும் மழைக்காலங்களில் மிகப்பெரிய வெள்ளை சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் மலைக்கு முன் இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இதையெல்லாம் கொஞ்சம் கூட பேரூராட்சி மன்ற தலைவர் செவி சாய்த்து கேட்பதற்கு தயார் இல்லை மேலும் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் நேர்மையாக செயல்படுபவர் என்பதால் அவர் இவர்களுடைய பல்வேறு முறைகேடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் செயல் அலுவலரை மாற்றம் செய்வதற்கும் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது .
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் பேரூராட்சியின் பல்வேறு வார்டுகளில் எந்த ஒரு வளர்ச்சி பணிகள் நடைபெறாததால் 7 வது வார்டு உறுப்பினர் காத்தார் ராஜா ,9வது வார்டு உறுப்பினர் சல்மா ,14 வது வார்டு உறுப்பினர் பானு, 15வது வார்டு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
மன்ற செய்திகள் வெளி வராமல் நிருபர்களை புறக்கணிப்பது
இந்த வெளிநடப்பு செய்த செய்தியை கூட வெளியிட விடாமல் செய்தியாளர்களை முடக்கியுள்ளது தொண்டி பேரூராட்சி மன்ற தலைவரின் மகனின் செயல்பாடு தனக்கு ஆதாயம்தரும் வேலைகளை மட்டும் பார்க்கும் அதில் ஆதாயம் பெறும் சம்மந்தப்பட்ட பேரூராட்சி மன்ற தலைவரின் மகன் மக்கள்நலன் சார்ந்த எந்தப் பணிகளுக்கும் முன்னெடுப்புகள் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நிலவுகிறது..

Ok
பதிலளிநீக்குThank you
நீக்கு