K. S. ஹம்சா... திருச்சூர் சேர்ந்தவர்
முன்னாள் முஸ்லிம் லீக் பிரமுகர்
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்...
மலபார் பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களும் நடத்தி வரும் தொழிலதிபரும் கூட..
ஆகஸ்ட் 4ம் தேதி அவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
சுமார் மூவாயிரம் பேருக்கு விருந்து உட்பட செய்திருந்த பிரமாண்ட ஏற்பாடுகள் அனைத்தையும் வயநாடு துரந்தம் காரணமாக தவிர்த்து விட்டு தனது வீட்டிலேயே எளிதாக இரண்டு குடும்பத்தவர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நிக்காஹ் நாளை நடைபெறுகிறது..
திருமண செலவுகளுக்காக ஒதுக்கிய தொகையை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக ஹம்சா அறிவித்துள்ளார்..
