ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து தொண்டி மக்கள் நலப்பணி குழு என்ற whatsapp குடும்பத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் தொண்டி பேரூராட்சி பகுதியில் தலைவிரித்தாடும் பல்வேறு ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் இவர்களுடைய செயல்பாடு இப்பகுதியில் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
இவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தொண்டியின் சாதனையாளர்கள் விருது என்ற பெயரில் KSK ஜன்னத் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. மக்கள் நலன் கருதி செயல்படும் சமூக ஆர்வலர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தொண்டியின் சிறந்த சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.
தொண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அகமது பாய்ஸ், இப்ராமூசா, நைனா முஹம்மது, ஆகியோருக்கு சாதனையாளர்கள் விருதும் bமற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது... இதில் பொதுமக்கள் மற்றும் பேருராட்சி மன்ற பிரதிநிதிகள், ஆசிரியர் பெருமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்