ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி குருஜிக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்த மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதி அரசர் அவர்கள்
இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் இழிவு படுத்திய குருஜி என்பவன் மீதான வழக்கு மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதி அரசரின் கடும் கண்டன கருத்துடன்
முடிவு பெற்றது
இறுதியாக இன்று (11/7/2024 )வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் அகமது பாய்ஸ் தரப்பில் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது ஆஜராகியும்
எதிர்மனுதாரர் குருஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி அவர்கள் ஆஜானார்கள்
இருதரப்பு இறுதி வாதங்களையும் கேட்ட நீதி அரசர் அவர்கள்
குருஜி என்பவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து பதிவிட்டதைப் போல் இஸ்லாமியர்களும் பதிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும்
குருஜியின் முகநூல் பக்கத்தை பதிவிட்ட கருத்துக்கள் அனைத்தையும் உடனடியாக இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அகற்றச் சொல்லியும்
குருஜிக்கு எதிராக ஜாமீன் மனு வரும்போது காவல்துறை தொடர் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக குருஜி முகநூல் பக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து பதிவிட்டால் தொடர்ச்சியான வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு காவல்துறை தான் பொறுப்பு என்றும் சொல்லி
வழக்கை இன்று மாண்புமிகு நீதி அரசர் அவர்கள் முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்கள்..
குருஜி மீதான ஜாமீன் மனு 10-07-2024, நேற்றைய தினம் திருவாடானை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது குருஜி என்பவர் ஜாமினில் வெளியில் வந்தால் சமூக ஒற்றுமை சீரழியும் மத மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
