கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் பதவியில்இருந்தபோது சட்டம் ஒழுங்கு விஷயத்தில் கடுமையாக உன்னுடைய ஆளுமை திறனை காட்டியவர்
அனைத்து அரசு நிர்வாகமும் சிறப்பாக செயல்பட்ட காலகட்டம் எந்த மதவாத அமைப்புகளையும் தலை தூக்க விடாமல் சாமானிய மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்து கொடுத்தவர் ஜெ ஜெயலலிதா அவர்கள்.
ஆட்சியாளர்களும் சரி அதிகாரிகளும் சரி சாமானிய மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்று தன்னுடைய பிடியை இறுக்கியவர். அவருடைய மறைவுக்குப் பிறகு அப்படியே நீர் மாற்றமாக தலைவர்கள் தங்களுடைய பொறுப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக மதவாத சக்திகளோடு கைகோத்ததின் காரணம் ஆட்சியை இழந்தார்கள்.
வாழ்நாளில் இனி ஒருபோதும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னவர். மத அடிப்படைவாத அமைப்புகள் எதுவாக இருந்தாலும் அதை இரும்பு கரம் கொண்டு அடக்கியவர். தனது எதிர்க்கட்சியான திமுகவால் முடியாத பல மதவாத ஆளுமைகளை தனது ஆட்சியில் ஆட்டங்கான வைத்து அடக்கியவர். ஆளுமை திறன் அரசு துறைகளில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கியவர். இப்படி கூறிக் கொண்டே போகலாம் ஜெ ஜெயலலிதா அவர்களின் கடைசி கால மரணத்திற்கு முன்னால் வரை அவர் செய்த ஆட்சி முறை மக்களை திருப்தி படுத்தியது ஜெயா அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தலைவர் பெருமக்கள் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அம்மையார் அவர்கள் போற்றி பாதுகாத்து வந்த ஜனநாயகத்தை எல்லாம் பதவிக்காக பலிகொடுத்தார்கள். ஆனால் சமீப காலமாக எதிர்க்கட்சியாக மாறிய பிறகு மீண்டும் அந்த பழைய அதிமுக துளிர்விட ஆரம்பித்துள்ளது. பாசிசத்துக்கு எதிரான சில உறுதியான முடிவுகளை அதிமுக மேற்கொண்டதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியை சிறப்பாக தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியாமலேயே மக்கள் அதிமுகவிற்கு பெருமளவு தங்களுடைய வாக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் தவிர்க்க முடியாத சில சூழல் அதிமுக வெற்றியை நழுவ விட்டது.
இருப்பினும் தற்போதைய பாசிசம் மதவாத எதிர்ப்பானது. அதிமுகவிற்கு சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை அதிகப்படுத்திஉள்ளது.
இந்த நிலை நீடித்தால் வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு பெரும் பாரமாக அமையும் போதாக்குறைக்கு. அரசு துறைகளில் பல்வேறு கட்டமைப்புகள் மதவாத பாஜகவிற்கு சாதகமாக செயல்படுவதும் ஆளும் அரசுக்கு எதிராக உள்குத்து வேலைகளை செய்யக்கூடியதும் அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்று வருவது திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
பொதுவாக காவல்துறையில் பாஜகவிற்கு ஆதரவான பல அதிகாரிகளை பார்க்க முடிகிறது.
இதனால் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக காவல்துறை செயல்பாடுகள் இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம் சமூகத்தால் முன்வைக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்தப் பகுதியைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் முக்குலத்தோர் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் ஏனைய சமூக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார். இந்தப் பகுதியை பொருத்தவரை இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு விதமான உறவு முறையோடு ஒரு குடும்பமாக பழகி வருகிறார்கள் தமிழகத்திலேயே சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த பகுதி விளங்குகிறது என்ற இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்டை மாவட்டத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்த பாஜகவின் அரசியல் பிரமுகர் ஒருவர் வந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இந்து முஸ்லிம்கள் ஒற்றுமைக்கு எதிராக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து மோசமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
அதில் குறிப்பாக முஸ்லிம்களின் மனம் மிகவும் புண்படும் வகையில் முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய மத குருமார்கள் ( ஹஸ்ரத் ) மற்றும் ஒளியுள்ளாக்கள் ( தர்காக்கள் பற்றி ) அவதூறான செய்திகளை வரலாறு என்ற பெயரில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவானது முஸ்லிம்கள் மத்தியிலே பெருமளவு கொந்தளிப்பை ஏற்படுத்தியது இதனைத் தொடர்ந்து ஜமாத்துகள் சார்பில் சம்பந்தப்பட்ட பாஜக பிரமுகர் மீது புகார்மனு எடுக்கப்பட்டபோது காவல்துறை தரப்பில் ஒரு சாதாரண நிகழ்வாக கண்டுகொள்ளப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும் பாஜக பிரமுகர்களுக்கு ஆதரவாக காவல்துறையின் செயல்பாடுகளும் இருந்து வந்தது இதனைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு நீதியரசர் மாண்புமிகு புகழேந்தி அவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு தன்னுடைய கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏன் இது போன்ற நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டத்தை உபயோகிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் காவல்துறை குற்றவாளிக்கு சாதகமாக பிணையில் இலகுவாக வெளியே வரும் Ipc பிரிவுகளை பதிவு செய்தது மேலும் குற்றவாளியை கைது செய்யாமல் அவரை முன் பிணையில் எடுப்பதற்கான வழிவகைகளையும் செய்து கொடுத்தது. இதனை அறிந்த முஸ்லிம்கள் மிகவும் வேதனையுடன் மீண்டும் மாண்புமிகு உயர் நீதிமன்றத்தை அணுகி நிகழ்வுகளை எடுத்துரைக்க நீதிமன்றம் கண்டினும் கண்டனத்தை தெரிவித்த பிறகு வழக்குகள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குற்றவாளியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது குற்றவியல் நடுவன் நீதிமன்றம் திருவாடானை மாண்புமிகு நீதியரசர் விசாரித்த ஜாமீன் மண்ணுக்கு ஆதரவாக அரசு தரப்பிலும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. பாசிசத்திற்கு எதிராக ஆட்சி நடத்தும் சமூக நீதி ஆட்சி என்று கூறப்படும் திமுக ஆட்சியில் மதவாத சக்திகளுக்கு ஆதரவான காவல்துறையின் நிலைப்பாடு எதை காட்டுகிறது என்பதை தமிழக ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்..
இது போன்ற நிகழ்வுகள் இந்தத் துறையில் மட்டுமல்ல பல்வேறு துறைகளிலும் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு பாசிச சக்திகளின் பணியாட்கள் ஆங்காங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து. இதுபோன்ற செயல்பாடுகள் தமிழக அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் வரும் தேர்தல்களில் திருவான்மை மக்களின் வாக்கு வங்கியை பெருமளவு தவறவிடும் வாய்ப்புகள் அரசுக்கு அமையும் என்பதையும் இந்தப் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
குற்றம் செய்பவன் யாராக இருந்தாலும் மத பேதம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பது வட்டத்தின் விதியாக இருக்கும்போது இதுபோன்ற செயல்பாடுகள் காவல்துறை மீது பெரும் கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது...
சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைக்க நீதியை நிலைநாட்ட திராவிட மாடல் ஆட்சியில் கை கொடுப்பார்களா காக்கிகள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.....
வாழ்க ஜனநாயகம்!
வளர்க சமூக ஒற்றுமை!!
