அதில் நம்புதாலையைச் சேர்ந்த குருஜி என்ற நபர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் இஸ்லாம் சம்பந்தமாகவும் முஸ்லிம்கள் பற்றியும் அவதூறான கருத்துக்களை வரலாறு என்று பதிவிட்டு அதை பலருக்கும் ஷேர் செய்துள்ளார். மேற்படி குருஜி என்ற நம்பர் தொடர்ந்து இதுபோன்று மத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவுகளை தன்னுடைய பேஸ்புக் மற்றும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதனால் சமூக ஒற்றுமை பாதிப்பது மட்டுமல்ல மத மோதல்களை ஏற்படுத்தும் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்று புகார்அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்படுவது காலதாமதம் ஏற்பட்டதால் மனுதாரர் அகமது பாய்ஷ் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கோரி ரிட் பெட்டிசன் மனுதாரர் தரப்பில் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் அஹமத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக நல்லிணக்க எதிரி குருஜி ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தது இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம்
சமூக நல்லிணக்க விரோதி குருஜி மீதான ஜாமின் மனு இன்று (22/7/2024) விசாரணைக்கு வந்தது இதில் புகார்தாரர் அகமது பாய்ஸ் தரப்பில் தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் குருஜி மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்கள்
இதற்கு முன்பு திருவாடனை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நம் தரப்பில் தாக்கல் செய்த ஆட்சேபனை மனு மற்றும் வாதத்தை
ஏற்றுக் கொண்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து குருஜியின் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்ட நீதி அரசர்களின் செயல்பாடானது அமைதியை விரும்பும் சமூக ஒற்றுமையை விரும்பும் மக்களால் வரவேற்கப்படுகிறது.
இதுபோன்று மத மோதல்களை ஏற்படுத்த நினைக்கும் தீய சக்திகளுக்கு கீழவை மற்றும் மேலவை நீதிமன்றங்கள் கொடுத்துள்ள தீர்ப்பு சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
