தொடர்ந்து தமிழகத்தில் பிரபல தாதாக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் புகலிடமாக பாஜகவை பயன்படுத்தி வரும் நிலையில் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இப்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் உச்சத்தை தொட்டது. இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை அதிமுகவினர் எடுத்தனர். இந்தநிலையில் அதிமுகவில் சிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சின்னசாமி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு உரிய மரியாதை கிடைக்காத காரணத்தால் மீண்டும் அதிமுகவிற்கே பல்டி அடித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தவர் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய, அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் R. சின்னசாமி, Ex. M.L.A.,பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

