ஜூலை 31,ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்புதாளை இப்பகுதியைச் சேர்ந்த குருஜி என்ற சசிகுமார் இவர் பாஜகவின் மாநில ஆன்மீகப்பிரிவு செயலாளராக இருக்கிறார்.
இவர் கடந்த ஜூன் 13ஆம் தேதி பேஸ்புக் சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் பற்றி அவதூறு கருத்துக்களை வரலாறு என்ற போர்வையில் பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டிருந்த கருத்துக்கள் இந்து முஸ்லிம் மக்கள் மத்தியிலே அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் அவறுடைய பதிவு இருந்ததால் அமைதியாக வாழ்ந்து வரும் இந்து முஸ்லீம்கள் மத்தியிலே மத மோதல்களை ஏற்படுத்தும் வண்ணம் தொடர்ந்து பல்வேறு பதிவுகளை அவர் பதிவேற்றம் செய்திருந்தார். இதை முஸ்லிம்கள் மத்தியிலே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக தொண்டி JAQH தவ்ஹீத் மர்கஸ் தலைவர் அகமது பாய்ஸ் என்பவர் தொண்டி காவல் நிலையத்தில் ஜூன் 13ஆம் தேதி புகார் அளித்து குருஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் கடந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் உறுதி மீது நடவடிக்கை கோரி ரிட் மனு தாக்கல் செய்தார்.
அகமது பாய்ஸ் தரப்பில் வழக்கறிஞர் கலந்த ஆசிக் அஹமத் ஆஜராகி நீதியரசர் புகழேந்தி அவர்களிடம் விசாரணையின் போது சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் குருஜி மீது உரிய நடவடிக்கை கூறினார். இதை கவனித்த உயர்நீதிமன்ற நீதி அரசர் சமந்தாக்கப்பட்ட குற்றவாளி மிக அருவருக்கத்தக்க மோசமான பதிவுகளை பதிவிட்டதை கண்டித்ததுடன் தொடர்ந்து குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஏன் கைது செய்யகூடாது என்று கேள்வி எழுப்புதுடன் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்தார். மேலும் கடந்த 29ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏற்கனவே சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் உடனடியாக குருஜியின் சர்ச்சைக்குரிய பதிவுகளை குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில் கடந்த 23 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குருஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை பலமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் அகமது பாயிஸ் சார்பில் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அஹமத் குற்றவாளிக்கு எதிராக தனது தரப்பு நியாயமான வாதங்களை முன் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதி அரசர் சம்பந்தப்பட்ட குற்றவாளி அவர் பதிவிட்டிருந்த சமூக வலைதளத்தில் தன்னுடைய பதிவுக்கு நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் மேற்படி குற்றவாளி நான்கு வார காலத்திற்கு தஞ்சையில் தங்கி தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையொப்பமிட வேண்டும் என்றும் இது போன்ற பதிவுகளை அவர் இனிமேல் பதிவிட கூடாது என்றும் மேற்படி நடவடிக்கைகள் சம்பந்தமாக முறையான அபிவீடவிட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு குருஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் குருஜியின் மத மோதல்களை தூண்டும் அடியான பதிவு என்பது சமூக அமைதியை சீர்குலைப்பது மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய கலவரத்தை தூண்டக்கூடிய செயலாக உள்ளது. குருஜி சம்பந்தமான பதிவை ஒவ்வொரு முறையும் ஜாமின் கேட்டு விண்ணப்பித்த போதும் இதனுடைய பாதிப்பை நீதியரசர்கள் முன்னிலையில் மனுதாரர் அகமது பாய்ஸ் தரப்பில் தெளிவாக விளக்கிய பிறகுதான் தொடர்ந்து நான்கு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே வழக்கில் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜகவை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் வழக்கு தொடுத்த சமூக அமைப்புகள் முறையாக இந்த வழக்கை கண்காணிக்காமல் விளம்பரத்திற்காக அவர்கள் அணுகியதால் குற்றவாளிகள் தப்பிக்கப்பட்டுள்ளார்கள்.
குழப்பமும் கழகமும் செய்வது கொலை செய்வதை விட கொடிய செயல் என்று முஸ்லிம்களின் வேத புத்தகம் கூறும் நிலையில் குருஜியுடைய வழக்கில் அதன் அடிப்படையிலேயே JAQH தவ்ஹீத் மர்கஸ் நிர்வாகம் அணுகியது என்பது அவர்கள் கூறியதிலிருந்து விளங்க முடிகிறது. எது எப்படி இருந்தாலும் சமூக அமைதியை பாதுகாத்த நீதியரசர்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்...
