அலறிய அமித்ஷ
வாயடைத்து போன ஓம் பிர்லா ஒடுங்கிய மோடி
*ராகுல் காந்தி என்ற
சிம்மத்தின் கர்ஜனை
கிடுகிடுத்த பாராளுமன்றம்
குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் *ராகுல் காந்தி* பேசிய பல்வேறு விவகாரங்கள் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது .
சமூக வலைத்தளங்களில் ராகுல் பேசிய காணொளிகளைப் பகிர்ந்து பலரும் விவாதம் செய்து வருகின்றனர்.
நீட் விவகாரம்
*சபாநாயகரின் ஒருதலைபட்சம்*, *சான்சத் தொலைக்காட்சியின் செயல்பாடுகள்*,
*மோடியின் தகிடு தந்தங்கள்* என்று பல விஷயங்களை தலைவர்
*ராகுல் காந்தி* இன்று விவரமாக பேசினார்.
அவருக்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், ராஜ்நாத் சிங் என்று பலர் மீண்டும் மீண்டும் பேசியும் கூட ராகுல் காந்தி அவையில் விடாமல் பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது .
*ராகுல் காந்தி தனது பேச்சில் அதானி அம்பானியின் ₹14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த பாஜக அரசு*,
*விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்*?
எழுதி வைத்துக் கொள்ளுங்கள், குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும்
*நீட் தேர்வு மீது மாணவர்களே நம்பிக்கை இழந்துவிட்டனர்*.
*இது பணக்காரர்களுக்கான தேர்வு என தங்களை சமாதானம் செய்துகொள்கின்றனர்*
நீட் தேர்வு வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
* 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள்கள் கசிந்துள்ளன*. பணம் இருந்தால்தான் மருத்துவப் படிப்பு என்ற நிலையை நீட் உருவாக்கியுள்ளது.
நீட் குறித்து விவாதிக்க கோரினால் அரசு அதை பரிசீலிக்கவில்லை.
நீட் முறைகேடு குறித்து குடியரசுத் தலைவரின் உரையில் எதுவும் இடம்பெறவில்லை.
*எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும்*,
*மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்*. என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மை சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை.
USE AND THROW' முறையில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறைதான் பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டம். இந்த திட்டத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தால் அதை பாஜக அரசு வீர மரணமாக ஏற்காது.
ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அதானி, அம்பானிக்கு அழைப்பு. ஆனால், அயோத்தியில் உள்ள தொழிலாளிகள், விவசாயிகள் விழாவிற்கு அழைக்கப்படவில்லை. அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக ஏராளமான நிலங்கள் பறிக்கப்பட்டது, அதற்கான உரிய இழப்பீட்டை பாஜக அரசு வழங்கவில்லை.
சபாநாயகராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டபோது உங்களுக்கு நானும் கை கொடுத்தேன் பிரதமர் மோடியும் கை கொடுத்தார். நான் கை கொடுத்தபோது நீங்கள் நிமிர்ந்து நின்று கை கொடுத்தீர்கள். பிரதமர் மோடி கை கொடுத்தபோது உடனே குனிந்து அவருக்கு கை கொடுக்கிறீர்கள்
மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா அரசியல் சார்பு இல்லாமல் செயலாற்ற வேண்டும் என்றார் ராகுல் காந்தி .
மொத்த பாஜகவையும் அதிர வைக்கும் அளவிற்கு , மோடி எழுந்து நின்று இரண்டு முறை குறுக்கிடும் அளவிற்கு ராகுல் காந்தியின் பேச்சுக்கள் பாராளுமன்றத்தை
கிடுகிடுக்க வைத்தது.
இதை தாங்கிக் கொள்ள முடியாத அமித்ஷா ஒரு கட்டத்திற்கு மேல் சபாநாயகர் மேல் கோபம் அடைந்து, அவையில் இது எப்படித் தொடர முடியும்.. எப்படி இந்த பேச்சை அனுமதிக்கிறீர்கள்? சபாநாயகரான நீங்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறீர்கள். விதிகளை மீறிச் சென்று, அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவதற்கு வாய்ப்பளிக்கிறீர்கள்.
தயவு செய்து இதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். இது தவறு என்று சபாநாயகரிடம் மன்றாடினார் அமித் ஷா . .
சபாநாயகர் ஓம் பிர்லாவும் எதுவும் செய்ய முடியாமல்.. மைக்கை அணைத்தாலும் தொடர்ந்து
ராகுல் சத்தமாக பேசியதால் வேறு வழி இல்லாமல் சபாநாயகர் இந்த பேச்சை அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
