ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடந்த13-6-2024 அன்று தொண்டி காவல் நிலையத்தில் ஒருபுகார்பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகார் மனுவை தொண்டி காவல் நிலையத்தில் கொடுத்து பத்து நாட்கள் கடந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்.. சம்பந்தப்பட்ட மனுதாரர் அகமது பாய்ஸ்
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக்அஹமது மூலம் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் அகமதுஃபைஸ் தாக்கல் செய்த ரிட்மனு கடந்த 27ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேற்படி மனு இன்று விசாரணைக்கு வந்தத நிலையில் மனுவை விசாரித்த மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிஅரசர் ப புகழேந்தி அவர்கள். தொண்டி காவல்துறையை கடுமையாக கண்டித்தார். சமூக அமைதியை சீர்குலைக்கும் இது போன்ற நபர்கள் மீது ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன்..
இதுபோன்ற நபர்கள் மீது அல்லவா குண்டர் தடுப்பு சட்டம் போட வேண்டும் என்று காவல்துறைக்கு தனது கண்டனங்களை தெரிவித்துக் கொண்டார். சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட குருஜி மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்படி நபரை உடனே கைதுசெய்யது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி மாவட்டSP இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு குருஜி மீது முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கை சிபி சிஐடி மாற்றிவிடுவேன் என்று எச்சரித்தார். மேலும் வழக்கை நாளை மறுதினம் 3-7-2024 தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்..
இது குறித்து மனுதாரர் அகமதுபாய்ஸ் கூறுகையில். இதுபோன்று சமூக அமைதியை சீர்குலைத்து மத கலவரத்தின் மூலம் அரசியல் ஆதாயம் பெறும் கேவலமானபோக்கிற்கு மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்ததீர்ப்பு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது..
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வாதாரத்தை தேடி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடுமையான உழைப்புகளுக்கு மத்தியில் மனிதன் ஓடிக்கொண்டிருக்கிறான். ஆனால் இது போன்ற தரம் தாழ்ந்த மனிதர்கள் ஒற்றுமையாக வாழும் சமூகங்கள் மத்தியிலே மத வெறுப்புணர்வுகளை தூண்டிவிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் விஷயத்தில் மதுரை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதி அரசர் அவர்களின் தீர்ப்பானது சிறுபான்மை மக்களின்மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது.. என்று கூறினார்.
