ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடந்த 13 ஆம் தேதி பேஸ்புக் சமூக வலைதளத்தில் முஸ்லிம் மத குருமார்களையும், நபிகள் நாயகத்திற்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் பெரிதும் நேசிக்கும்
( தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒளிவிலாக்கள்) இறை நேசர்கள் பற்றியும் இழிவாக தரம் தாழ்ந்து மிக மோசமாக பதிவுகள் வெளியிட்ட பாஜகபிரமுகர் குருஜி என்ற நபர் மீது 13-6-2024, அன்று தொண்டி JAQH தவ்ஹீத் மர்கஸ் சார்பில் அகமது ஃபாயீஸ் என்பவர் தொண்டி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார் . அதன் மீது இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
சமூக அமைதியை சீர்குலைத்து மத மோதல்களை ஏற்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்த தவறிய நடவடிக்கை எடுக்காத தொண்டி காவல்துறை சம்பந்தமாகவும் சம்பந்தப்பட்ட குற்றவாளி மீதும் உரிய நடவடிக்கை எடுக்ககோறி சென்னை
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் கலந்தஆசிக் அவர்கள் ஆஜராகி மனு CRL op(md)19107/2024, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விரைவில் வழக்கு விசாரணைக்கு வரஉள்ள நிலையில் அமைதியை சீர்குலைத்து கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வரும் குருஜி என்பவன் சம்பந்தமாக பல்வேறு முறைகேடு மற்றும் குற்றப் பின்னணி வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.தமிழக அரசு இதுபோன்று சமூக அமைதியை சீர்குலைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதப்படுத்துவது என்பது சமூக அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாத சக்திகளுக்கு சாதகமாகி விடும் என்பதை கருத்தில் கொண்டு
பல்வேறு குற்றப் பின்னணிகள் உள்ள குருஜி என்ற கலவர காரன் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து சமூக அமைதியை நாட்ட அரசு முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி நபரானவர் இந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிக்கு குடி பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
