ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடந்த13-6-2024 அன்று தொண்டி காவல் நிலையத்தில் ஜாக் தவ்ஹீத் ஜமாத் சார்பில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் தமிழகத்திலேயே முன்மாதிரியாக மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம். அனைத்து சமூக மக்களுக்கும் முஸ்லிம்கள் ரத்ததானம், மருத்துவ சேவை, கல்வி உதவி பேரிடர் மீட்பு பணிகள், அவசர காலத்தில் எந்த நேரத்திலும் அனைத்து சமுதாய மக்களுக்கான உதவி, ஆம்புலன்ஸ் சேவை என, எல்லா சமுதாய மக்களையும் அரவணைத்து நன்மை செய்து வருகிறோம் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறோம். நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குருஜி என்ற பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்கு வந்த தீவிர ஹிந்துத்துவா பயங்கரவாத செயல்பாடுகளை கொண்ட நபரான குருஜி என்பவர்b சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் வேண்டுமென்றே மத மோதல்களை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து முஸ்லிம்கள் பற்றி அவதூறான செய்திகளையும் முஸ்லிம் மதகுருமார்களை படுமோசமாக விமர்சித்து அந்த விமர்சனத்தை வரலாறு என்று குறிப்பிட்டு அது அப்பாவி இந்து மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார்.
இதன் மூலம் ஏதும் அறியாத அப்பாவி இந்த இளைஞர்கள் மூலச் சலவை செய்யப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் கவரப்பட்டு இந்தப் பகுதியில் பல்வேறு கலவரங்களைச் செய்ய ஆயத்தம் செய்து வருகிறார்.
மேற்படி நபரால் இந்த பகுதியில் ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்து வரும் சமூக மக்கள் மத்தியில் மதவெறுப்புகளை ஏற்படுத்தி ஆதாயம் தேட நினைக்கிறார் ..
தொடர்ந்து தன்னுடைய குருஜி பேஸ்புக் பக்கத்தில் முஸ்லிம்கள் சம்பந்தமான அவதூறான செய்திகளை வெளியிட்டு வரும் மேற்படி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்த மனுவில் பகுதி முஸ்லிம்கள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை வழங்கிய ஜாக் தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் அகமது பாய்ஸ் அவர்கள் கூறுகையில்..
இந்தப் பகுதியில் வாழக்கூடிய இந்து கிறிஸ்தவ முஸ்லிம் மக்கள் உறவுமுறை பாசத்தோடு இங்கு வருகிறோம். அவரவர் அவரவர் வேலையை பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலைதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து குறி பார்க்கிறேன் என்ற பெயரில் முஸ்லிம்களின் இடத்தை வாங்கி ஒரு கோவிலை கட்டிக்கொண்டு அதன் மூலமாக பிழைப்பு நடத்தி வரும் குருஜி என்ற நபர் சட்டங்களை மதிக்காமல் தன்னுடைய வாகனங்கள் முகப்பு நம்பர் பிளேட்டுகள் இல்லாத வாகனமாக நம்பர் பிளேட்டுகளுக்கு பதிலாக குருஜி என்ற பெயர் மட்டும் குறித்து இந்தப் பெயரை பெருமை அடித்துக் கொள்ளும் விதமாக இந்தப் பகுதிகளில் வாழும் அப்பாவி இளைஞர்கள் தன்னை மிகப்பெரிய தலைவனை போல் காட்டிகொண்டு முஸ்லிம் மக்கள் பற்றி தவறான கருத்துக்களை பதிவு செய்து சமீப காலமாக கலவரங்களை ஏற்படுத்தும் முயற்சியை செய்து வருகிறார்.
மேற்படி நபர் மீது ஏற்கனவே இருந்த புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் எங்கள் பகுதியில் கலவரத்தை தூண்டுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
இதற்காக முஸ்லிம்களை சீண்டும் வகையில் ஏழுஆண்டுகள் மார்க்க கல்வி பெற்ற முதிர்ச்சி பெற்ற ஹஸ்ரத் ( மதகுரு )மார்களை பற்றியும், ஒளிவில்லாக்கள் என்று அழைக்கப்படும் இறைநேசர்கள் பற்றியும் தவறான விளக்கத்தை கொடுத்து வரலாறு என்று அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது . இதுபோன்று பதிவுகள் மூலம் முஸ்லிம்களை சீண்டிவிட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தி அமைதியை சிறுகுழக்க நினைக்கிறார்.
இந்நிலையில் தான் முஸ்லிம் சமூகங்களின் சார்பில் இந்த மனு சட்டப்படி நடவடிக்கை கோரி கொடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கொடியவர்களை ஆரம்ப நிலையிலேயே அரசு நடவடிக்கையின் மூலம் துடைத்து எறிய வேண்டும் என்பதே இந்தப் பகுதியில் சமூக அமைதியை விரும்பும் அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது. காவல்துறை காலதாமதம்
படுத்தாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதி மக்களின் அமைதியான வாழ்க்கை சூழலை உறுதிப்படுத்த வேண்டுகிறோம் என்று அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..
சிலர் தன்னுடைய பிழைப்புக்காகவும் சில ஆதாயங்களுக்காகவும் இரு சமூகங்களுக்கு மத்தியில் சண்டையை ஏற்படுத்தி பிரச்சனைகளை ஏற்படுத்தி பிழைப்பு நடத்த பார்க்கிறார்கள் இது போன்ற கொடிய விஷமிகளை ஆரம்ப நிலையிலேயே காவல்துறை நடவடிக்கையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாக உள்ளது. காவல்துறை விரைந்து செயல்படுமா பார்ப்போம்...
Video வீடியோ பதிவு👇video link
