தொண்டி பேரூராட்சியில் கடுமையாக ஊழல் மலிந்து கிடப்பதாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏர்படுத்தி வந்த நிலையில் 4-7-2024 அன்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு லஞ்சப் பணம் உட்பட கணக்கில் வராத பணம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து லஞ்சம் பெற்றதாகவும் அதற்கு உதவியதாகவும் தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், உதவியாளர் ரவி, அலுவலக தற்காலிக பணியாளர் தொண்டி ராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இப்போது இந்த சம்பவம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
