திருச்சி மாவட்டம் ஜமால் முகமது கல்லூரியின் வரலாற்றுத் துறையின் சார்பாக மாணவர்களுடன் பாரம்பரிய நடை பயணம் நடைபெற்றது.

இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக மலைக்கோட்டைக்கு சென்று, அங்குள்ள குடைவரைக் கோயிலில் மாணவர்களை அழைத்துச் சென்று அதைப் பற்றி வரலாற்று மாணவர்களுக்கு விலக்கப்பட்டது.
இந்த குடைவரை சிற்பங்களை பற்றி வரலாற்று துறை தலைமை ஆசிரியர் அக்பர் உசேன் அவர்கள் எடுத்துரைத்தார்.


பின்னர், அதைத் தொடர்ந்து அடுத்தபடியாக முகலாய பேரரசர் நவாப் அசத்துல்லா கான் 1765 இல் கட்டிய மசூதிக்கு சென்றனர்...
முகமதியா மசூதி:
![]() |
| முகமதியா மசூதி, சௌக் மஸ்ஜித் ஹவுஸ், திருச்சி. |
கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்திலிருந்து சாலை வழியாக கொண்டு வரப்பட்ட கற்களால் ஆன சுவர்கள் மற்றும் தூண்களைக் கொண்டுள்ளது, யானைகளால் சுமந்து செல்லப்பட்டது.
![]() |
☝🏻☝🏻☝🏻 இது பள்ளியின் முக்கியமான உள்வாயில் இதன் வழியாகத்தான் முகலாயப் பேரரசர் நவாப் யானையின் வழியாக வரும் இடம்.

லூர்து அன்னை தேவாலயதம்:
லூர்து அன்னை தேவாலயதம்,
திருச்சி.
பயணத்தின் நிறைவாக, புனித லூர்து அன்னை தேவாலயம் செல்லப்பட்டது.
இது செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்திற்குள் அமைந்துள்ளது மற்றும் பிரான்சில் உள்ள லூர்து அன்னை பசிலிக்காவின் பிரதிபலிப்பாகும்.
இந்த தேவாலயம் காலோ-கத்தோலிக்க பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் 220 அடி உயரமுள்ள ஒரு பிரதான கோபுரம் உள்ளது.
இது நகரத்தின் மிகப் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும், இதன் கட்டுமானப் பணிகள் 1903 இல் நிறைவடைந்தன.
ஹஸ்ரத் டேபிள் ஆலம் பாதுசா நாதர்வலி தர்கா:
ரோமாபுரி பேரரசின் மன்னராக இருந்து, இறைவனுக்காகப் பதவி துறந்து வந்த நாதர்வலி அவர்களின் நினைவாக இந்த தர்கா உள்ளது.
இங்கு, வருடாந்திர 'உரூஸ்' விழாக்கள், சந்தனம் பூசுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தர்கா வளாகம் பல்வேறு கடைகள் மற்றும் பக்தர்களின் வருகையால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும், இது அனைத்து மதத்தினரையும் வரவேற்கும் ஒரு அமைதியான இடமாக உள்ளது.



