ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 13ம் வார்டு பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது...
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கால்வாய்கள் முறையாக பராமரிப்பின்றி மூடாமல் நோய் தொற்று பரவும் வகையில் சாலையில் அமைந்துள்ளது. மேலும், சாலை அமைக்க கல்கள் மற்றும் மண்ணை அப்பகுதியில் உள்ள கால்வாயில் முறையற்ற நிலையில் வைத்து அதன் மேல் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் பெரும் கண்டனங்களை எழுப்பி உள்ளனர்...
இவ்வாறு, எந்த ஒரு அடிப்படை வசதியையும் முறையாக அப்பொழுது மக்களுக்கு தொண்டி பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்...
