சசிகலாவையும், டிடிவி தினகரனையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதுடன், கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் அந்தப் பொறுப்புகளை வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதோடு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், கமிட்டி அமைக்க வேண்டுமென்றும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வேலுமணி பேசியுள்ளார்.
வேலுமணியும், நத்தம்விஸ்வநாதனும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி. கட்சித்தலைமை தங்களை நீக்கினால் தவெகவில் இணையலாம் என்பதற்காகவே வேலுமணி இப்படிப் பேசுவதாக பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
அதிமுகவை உடைக்க வேலுமணி தரப்பு தயாராகிவிட்டதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா.
| தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் |
'தொடர் தோல்விகளுக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி'
சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அதிமுக இழந்து விட்ட நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.
அதன்பின் அவர்களில் 6 பேர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர்.
