கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத இந்த மிக மோசமான பேரிடரால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்ட எண்ணெய் விநியோக தடைகளுக்கு மாற்றாக, இந்தியா சமீபகாலமாக வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவில் அதிகரித்திருந்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த இறக்குமதி உச்சத்தை தொட்டது.
இந்த சூழலில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக, வெனிசுலாவின் முக்கிய ஏற்றுமதி துறைமுகமான 'லா குவைரா' அவசரநிலை பிரகடனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் கப்பல் போக்குவரத்து தாமதம், மின் தடை மற்றும் உள்கட்டமைப்பு பாதிப்புகள் ஏற்பட்டு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என காப்பீட்டுத்துறை நிபுணர் குணால் கன்னா எச்சரித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, வெனிசுலாவின் எண்ணெய் திட்டங்களில் இந்தியாவின் 'ஓஎன்ஜிசி விதேஷ்' நிறுவனம் நேரடியாக முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி, வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை சந்தித்து சுரங்கம் மற்றும் மருந்து உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்திய முதலீடுகளை விரிவுபடுத்துவது குறித்து பேசியிருந்தார். தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் இந்த முதலீட்டு திட்டங்களையும், கப்பல் காப்பீட்டு செலவுகளையும் பெருமளவில் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
