திருச்சி மாவட்டம், ஏர்போர்ட் அருகில் அன்பு நகரில் உள்ள அல்-ஹுதா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டார்.
நிகழ்வில் தாளாளர் அப்துல் மஜீத், தலைமை ஆசிரியர் சேக் தாவூத், கணினி ஆசிரியர் ஷாஜகான், அப்துர் ரஹ்மான், நூருதீன் மற்றும் பைசல் அஹமது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது...
மேலும், இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அல்-ஹுதாவின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அல்-ஹுதாவில் படித்து சென்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் நிகழ்வில் அமர்ந்து கௌரவிக்கப்பட்டனர்.


